Friday 17th of May 2024 03:13:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கையின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!


இலங்கையில் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள காலநிலை முன்னறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE